திறந்தவெளி ‘பார்’ ஆக மாறிய பள்ளி வளாகங்கள்

ஜி.விஸ்வநாதன் - பொன்னேரி தொகுதி கன்னியம்பாளையம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் உரிய பராமரிப்பு இல்லை. விவசாயத்துக்கு நீர் இல்லாமல் ஏராளமான விவசாய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னைக்கு அருகே உள்ள பொன்னேரி தொகுதி குடிநீருக்கு பல ஆண்டுகளாக புதிய குடிநீர் கிடைக்காமல் கோடைகாலங்களில் சிரமப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அதிமுக வேட்பாளர் தேர்தல் நேரங்களில் வாக்குறுதிகள் கொடுப்பதோடு சரி. எதையும் நிறைவேற்றுவதில்லை. இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், அந்த பள்ளி வளாகங்கள் விடுமுறை நாட்களில் திறந்தவெளி பாராக உள்ளது. வாக்குறுதி அளித்து நிறைவேற்ற தவறிய ஆளும் கட்சிக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம்.

Related Stories:

>