×

நெல்லை தொகுதியில் போட்டியிட இப்போதே ‘துண்டு’ போட்ட நயினார்

நெல்லை: நெல்லை தொகுதியில் இலை கட்சியில் மூன்று முறை களம் கண்டவர் நயினார் நாகேந்திரன். முதல் முறையாக கடந்த 2001 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நயினார் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகள்  போக்குவரத்து துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் என மூன்று துறைகளை அடுத்தடுத்து கவனித்தவர். அமைச்சரின் துறைதான் 5 ஆண்டுகளில் மாறியதே தவிர பதவி கெட்டியாக இருந்தது. எனினும் 2006  தேர்தலில் இலை கட்சியில் போட்டியிட 2வது முறையாக வாய்ப்பு கிடைத்த போதும், இதே நெல்லை தொகுதியில் நயினாரின் பாடு எடுபடவில்லை. தோல்வி தான் மிஞ்சியது. 2011 தேர்தலில் மீண்டும் இலை கட்சியில் சீட் வாங்கி இம்முறை  எம்எல்ஏ ஆனார்.

ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. எனினும் 2016 தேர்தலில் மீண்டும் இலை கட்சியில் போட்டியிட நயினாருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருக்கு தோல்விதான் மிஞ்சியது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு இனி அதிமுக  தேறாது என முடிவு செய்த நயினார் இலை கட்சியில் இருந்து பூ கட்சிக்கு தாவினார். டெல்லி சென்று பாஜவில் ஐக்கியமானார். கட்சியில் சேர்ந்த உடனேயே மாநில துணைத் தலைவர் பதவி கிடைத்தது. கடந்த மக்களவை தேர்தலில் முதன்  முறையாக ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கினார். அங்கும் தேறவில்லை.

தேசிய கட்சியில் இருந்தாலும் நமக்கு மாநில அரசியல் தான் சரி என முடிவுக்கு வந்துள்ள நயினார் மீண்டும் தனது பழைய நெல்லை தொகுதி மீது கண் வைத்துள்ளார். அதை மனதில் வைத்து தான் நெல்லையில் நடந்த சக்தி கேந்திர  பொறுப்பாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் பாஜ வெற்றி பெறும் முதல் தொகுதி நெல்லை தொகுதியாக தான் இருக்கும் என பேசி தொகுதிக்கு தான் ரெடி என்பதை கட்சிக்கு தெரிவிக்கும் வகையில் ‘துண்டு’ போட்டு வைத்துள்ளார்.


Tags : Nainar ,constituency ,Nellai , Nayyar put the ‘piece’ right now to compete in the Nellai constituency
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்