வன்முறையின் பிடியில் மேற்கு வங்கம்.. என்னால் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை :ராஜினாமா செய்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி!!

டெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பட்ஜெட் விவாதத்தில் பேச எழுந்த போது, திடீரென அவர் தனது ராஜினாமாவை அறிவித்ததால் மற்ற எம்.பி.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய அவர்,  ஒவ்வொரு மனிதனும் தன் மனசாட்சியின் குரலுக்கு செவிசாய்க்கும் ஒரு காலம் வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் உணர்ச்சிபூர்வமான வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதைக் கண்டோம். அதுதான் அவர்கள் நாட்டை நேசிப்பதை காட்டுகிறது. இன்று COVID க்கு இந்தியா பதிலளிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

வங்காளம் வன்முறையின் பிடியில் இருக்கும்போது என்னால் இந்த நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. மாநிலத்தில் நடக்கும் வன்முறை தொடர்பாக அவையில் எதுவும் பேசமுடியவில்லை. எனது கட்சி, என்னை எம்பியாக்கி இங்கு அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், மாநிலத்தில் வன்முறை தொடர்பாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. இங்கே உட்கார்ந்து எதையும் செய்ய முடியாவிட்டால், ராஜினாமா செய்துவிடு என்று என் மனசாட்சி என்னிடம் கூறுகிறது. இதற்குப் பிறகும் மாநில மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நடப்பதை இனி என்னால் மன்னிக்க முடியாது. எனக்கு மூச்சுத் திணறுகிறது. ராஜினாமா செய்வது சிறந்தது என்று என் மனசாட்சி கூறுகிறது என்று தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.

Related Stories:

>