மன உளைச்சல் காரணமா?: மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை..!!

மதுரை: மதுரையில் பைக்காரா பகுதியில் நகை கொள்ளை வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த நபர் தற்கொலை செய்துகொண்டார். 150 சவரன் திருட்டு வழக்கில் துப்புரவு பணியாளராக கண்ணன் என்பவர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணையின் போது கண்ணனை போலீசார் அடித்து துன்புறுத்தியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மறுநாள் மீண்டும் விசாரணைக்கு அழைத்த நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்ணன் சடலமாக மீட்கப்பட்டார். தொடர் விசாரணைக்கு ஆஜரான நிலையில் மன உளைச்சலால் கண்ணன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>