×

கடும் பனிப்பொழிவால் வந்த வினை : அமெரிக்காவில் 133 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. 6 பேர் பலி; 65க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

வாஷிங்டன் :அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் போர்ட் வர்த் நகரில் உள்ள பிரதான சாலையில் அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டன. கண்டெய்னர் லாரிகள் முதல் சிறிய ரக கார்கள் வரை சுமார் 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 65 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அதிகாலையில் சாலைகளை மறைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதே விபத்திற்கு காரணமாக முதற்கட்ட வவிசாரணையில் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் 133 வாகனங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி நீல்  தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்ட சாலை மூடப்பட்டு விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீயணைப்பு வீரர்கள் துணையோடு அகற்றப்பட்டன. தொடர் பனிபொழிவு நிலவுவதால் வாகன ஓட்டிகள் சீரான வேகத்தில் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : United States , Accident, USA, Texas
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்