தளி அருகே பள்ளி வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம கும்பல் : போலீஸ் விசாரணை

தேன்கனிக்கோட்டை: தளி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தளி அருகே மதகொண்டப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில், பல்வேறு வகையான மரங்களை பராமரித்து வருகின்றனர். அங்குள்ள சந்தன மரத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அடர்ந்த வனப்பகுதி போல் காணப்படும் பள்ளி வளாகத்தில் சந்தன மரத்தை தேடி கண்டுபிடித்து, அதனை அடியோடு வெட்டியுள்ளனர். ஆனால், அதற்குள் பொழுது புலர்ந்ததால் வெட்டிய துண்டுகளை அப்படியே போட்டு விட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற நிர்வாகிகள், சந்தன மரம் வெட்டப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

 இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், மதகொண்டப்பள்ளி விஏஓ மாதேஷ் நேரில் சென்று, சந்தன மரம் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், தளி போலீசார் வழக்குப்பதிந்து, பள்ளி வளாகத்தில் உள்ளி சிசிடிவி கேமரவை ஆய்வு செய்து சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். தனியார் பள்ளி வளாகத்தில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>