×

கொரோனா தொற்று தடுப்பு எச்சரிக்கையால் திருவையாறு காவிரி ஆறு வெறிச்சோடியது: பக்தர்களின்றி தீர்த்தவாரி நடந்தது

திருவையாறு: கொரோனா தொற்று தடுப்பு எச்சரிக்கையால், திருவையாறு காவிரி ஆற்றில் தர்பணம் செய்ய பொதுமக்கள் வராததால், வெறிச்சோடியது. பக்தர்களின்றி தீர்த்தவாரி மட்டும் நடந்து.திருவையாறு ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து 1000க்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து திருவையாறு காவிரி ஆற்று புஷ்யமண்டப படித்துறையில் புனித நீராடி படித்துறையில் அமர்ந்திருக்கும் புரோகிதர்களிடம் தர்பணம் செய்து திதி கொடுத்து, ஐயாறப்பரை வழிபட்டு செல்வது வழக்கம்.

கொரோனா தொற்று பரவல் அதிகமாகி உள்ள காரணத்தினால் பொதுமக்களின் நலன் கருதி, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் பொதுமக்கள் யாரும் புனித நீராட, தர்பணம் செய்வதற்கும் தடை விதித்திருந்தனர். இதனால் நேற்று தை அமாவாசை தினத்தில் தர்பணம் செய்ய பொதுமக்கள் யாரும் செல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. மதியம் ஐயாறப்பரை கோவிலிருந்து சாமி புறப்பட்டு புஷ்யமண்டப காவிரி ஆற்று படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்து சாமி புறப்பட்டு கோயிலுக்கு சென்றது.



Tags : river ,Cauvery ,Thiruvaiyaru ,devotees ,Tirthwari , Thiruvaiyaru Cauvery river deserted due to corona infection warning: Tirthwari without devotees
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை