×

அறந்தாங்கியில் திறந்தவெளியில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள்: நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

அறந்தாங்கி: அறந்தாங்கியில் திறந்தவெளியில் செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனங்களில் இருந்து கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.அறந்தாங்கி நகரில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கு அறந்தாங்கி நகரில் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளன. இந்த வாகனங்கள் மூலம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் உள்ள கழிவுகளை செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகனங்களில் எடுத்து பின்னர் அந்த கழிவுகளை அறந்தாங்கி சப் கலெக்டர் அலுவலகம் பின்புறம் களப்பக்காடு பகுதியில் திறந்த வெளியில் கொட்டுகின்றனர். இவ்வாறு திறந்தவெளியில் தொடர்ந்து கொட்டப்படும் செப்டிக்டேங்க் கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி முத்துசிவகிருபாகரன் கூறியது:அறந்தாங்கி நகரில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் மனிதக் கழிவுகளை தனியார் செப்டிக் டேங்க் வாகனங்கள் மூலம் கட்டண அடிப்படையில் அகற்றுகின்றனர். பின்னர் அந்த வாகனத்தில் சேகரமாகும் கழிவுகளை உரமாக்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை புதுக்கோட்டை கொண்டு சென்றனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக அறந்தாங்கி பகுதியில் களப்பக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளியில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் அறந்தாங்கி நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அத்துமீறி கொட்டுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aranthangi ,municipality , Septic tank waste dumped in the open in Aranthangi: Will the municipality take action?
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது