×

உள்நாட்டு விமான பயண கட்டணங்களுக்கான வரம்பு உயர்வு: 10 முதல் 30% உயர்த்தியது சிவில் ஏவியேஷன் அமைச்சகம்

டெல்லி: உள்நாட்டு விமான பயண கட்டணங்களுக்கான வரம்பை உயர்த்தி மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் விமான பயண கட்டணங்கள் 30% வரை உயர்கிறது. கொரோனா தொற்றால் விமான போக்குவரத்துத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான பயண நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றுவது சம்பளத்தை குறைப்பது என நெருக்கடியை சமாளிக்க போராடி வந்தன.

இந்த நிலையில் விமான பயணங்கள் மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. மேலும் விமான பயணத்தின் நேரம் அடிப்படையில் ஏழு பிரிவுகளாக பிரித்த மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் அவற்றிற்கு கட்டணத்தை நிர்ணயித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது விமான பயண கட்டணங்களுக்காக வரம்புகளை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

10% முதல் 30% வரை உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 2,000 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாகவும் அதிகபட்சமாக கட்டணம் 6,000 ரூபாயிலிருந்து 7,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 150 முதல் 180 நிமிட பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 6,100 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 20,400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

3 மணி முதல் 3.30 மணி நேர பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 7,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் 18,600 லிருந்து 5,600 ரூபாய் அதிகரித்து 24,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரையோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையோ இந்த கட்டண உயர்வு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Ministry of Civil Aviation , Domestic air travel
× RELATED ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம்...