×

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட் விற்பனை செய்த 2 பேர் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி சீட் விற்பனையில் ஈடுபட்ட குமார் (47), வரதராஜ் (43) ஆகியோரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட், ரூ.23,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kerala ,Pondicherry , Puducherry, Ban, Kerala Lottery Seat, 2 arrested
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...