இந்திய மண்ணை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை; அதிலிருந்து மோடி தவறிவிட்டார்!: ராகுல் தாக்கு

டெல்லி: இந்திய மண்ணை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை; அதிலிருந்து மோடி தவறிவிட்டார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். லடாக் எல்லையில் பதட்டத்தை தடுப்பது தொடர்பான உடன்பாடு சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது என ராகுல் குறிப்பிட்டுள்ளார். இந்திய ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய மலைப்பகுதிகள் விட்டுக்கொடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். சீனாவை எதிர்க்க துணிவு இல்லாமல் பிரதமர் மோடி விட்டுக்கொடுத்துவிட்டார். எல்லைகளை பாதுகாக்க நமது ராணுவம், விமானப்படை, கப்பல்படை தயாராக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>