காதலர் தினத்தை முன்னிட்டு வைர நகைகளுக்கு சலுகை தனிஷ்க் அறிவிப்பு

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு வைர நகைகளுக்கு 21 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை தனிஷ்க் ஜூவல்லரி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனிஷ்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கயில் கூறியிருப்பதாவது: காதலர் தினத்தை கருத்தில் கொண்டு, காதல் மற்றும் அன்பின் உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், காதலை பிரகாசமாக ஜொலிக்கச் செய்யும் வகையிலும் அழகான வைர நகைகளை தனிஷ்க் அறிமுகம் செய்துள்ளது. பிணைப்பை மேலும் இனிமையாக்க, தனிஷ்க் பிராண்ட் நகை மதிப்பில் 21 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  

எனவே, காதலர் தினத்தில் தனிஷ்க் வைர நகை தயாரிப்புகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து நீங்களே பரிசளித்துக் கொள்ளலாம், அல்லது அன்புக்கு உரியவருக்கு பரிசளித்து அன்பை வெளிப்படுத்துங்கள். இதற்காக நேர்த்தியான எண்ணற்ற வண்ணங்களில் பல்வேறு வடிவமைப்புகளில் வைரநகைகள் உள்ளன. நிச்சயதார்த்த மோதிரங்கள், அழகிய வளையல்கள், சங்கிலி பதக்கங்கள், நேர்த்தியான காதணிகள், இதய வடிவ வைர நகை வடிவமைப்புகள் உள்ளன.  மேலும், தனிஷ்க் பிராண்டில் திருமணம் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும், தினசரி பயன்பாட்டுக்கும் அணியும் வகையில் விதவிதமான வைர நகைகள் உள்ளன. நகை வகைகள் 10,000 முதல் தொடங்குகிறது. தனிஷ்க் ஷோரூம்களில் மட்டுமின்றி, www.tanishq.co.in என்ற இணையத்திலும் வாங்கலாம் என, தனிஷ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>