×

டிக் டாக்குக்கு பதிலாக ‘தீக் தக்’ ஆப் அறிமுகம்

புதுடெல்லி: சீனாவின் தடை செய்யப்பட்ட டிக்டாக் ஆப் போலவே, இங்கிலாந்தில் வசிக்கும் 17 வயது இந்திய சிறுமி தீக் தக் ஆப் ஒன்றை உருவாக்கி அசத்தி உள்ளார். சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்துள்ளது. இதனால், டிக் டாக் பயன்பாட்டாளர்கள் பெரிதும் கவலை அடைந்தனர். டிக் டாக்கைப் போலவே பல்வேறு மொபைல் ஆப்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் புதிய வரவாக ‘தீக் தக்’ (dheek thaak) அமைந்துள்ளது.

இந்த ஆப்பை உருவாக்கியவர் இங்கிலாந்தில் வசிக்கும் 17 வயது இந்திய சிறுமி சாய்னா சோதி. தற்போது, தீக் தக் ஆப் ஆன்ட்ராய் மற்றும் ஐஓஎஸ் தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும். இதிலும், உங்கள் திறமையை காட்டும் சிறு வீடியோக்களை அப்லோடு செய்து, அதை வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய முடியும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் சாய்னா உருவாக்கிய இந்த ஆப் நவம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் லோகோ ‘ஓகே’ என செய்கை செய்வது போன்று அமைந்துள்ளது. மூவர்ண கொடியில் உள்ள நிறங்களான வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்ச் நிற, லோகோவை சுற்றி மெல்லிய கோடிடப்பட்டுள்ளது. டிக்டாக் போலவே உச்சரிப்பு இருக்கும்படி தீக் தக் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tik Tak , Processor, Introduction
× RELATED கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’...