×

ஆஸி ஓபன் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன் சோபியா தோல்வி இந்தியர்கள் தொடர்ந்து வெளியேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின்  மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் சோபியா கெனின்(22)  2வது சுற்றிலேயே தோற்று வெளியேறி உள்ளார். இரண்டாவது சுற்றில் நேற்று  எஸ்டோனியா வீராங்கனையும் உலகின் 65ம் நிலை வீராங்கனையுமான கயா கனேபி(35) உடன்  உலகின் 4ம்நிலை வீராங்கனையுமான சோபியா மோதினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய கயாவின் சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல்  சோபியா திணறினார். அதனால்  கயா 6-3, 6-2 என அடுத்தடுத்த செட்களை வசப்படுத்தினார். அதனால்    நடப்பு சாம்பியன் சோபியா 0-2 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறினார். இந்த ஆட்டம்  ஒரு மணி  4நிமிடங்கள் நடந்தது. மேலும்  கயா 3வது முறையாக ஆஸி ஓபனில் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மெல்போர்னில் 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில்  ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), ஜெனிபர் பிராடி(அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா(செக் குடியரசு), பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து), டோனா வேகிக்(குரேஷியா) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர். அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆந்த்ரே ரூபலேவ்(ரஷ்யா),  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோர் நேற்று 3வது சுற்றில் நுழைந்தனர். இந்தியர்கள் தோல்வி:  இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் திவிஜ் சரண், ஸ்லோவாக்கிய வீரர் இகோர் ஜெலேனய் ஜோடி, ெஜர்மனியின்  கெவின் கிரவிட்ஸ், யான்னிக் ஹன்ப்மன் ஜோடியுடன் நேற்று மோதியது. அதில் ஜெர்மனி ஜோடி ஒரு மணி 4 நிமிடங்களில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றது.

அதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ருமேனியாவின் மிஹேலா பஸர்நேஸ்கு ஜோடி   ஆஸ்திரேலியாவின் ஒலிவியா கடெக்கி, பெலிண்டா உல்காக் ஜோடியை நேற்று எதிர்கொண்டது.  அதில் ஆஸ்திரேலியா இணை அதிரடியாக விளையாடி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றது. இந்தப்போட்டி ஒரு மணி நேரம் 17நிமிடங்கள் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுமில் நாகல், ஆண்கள் இரட்டையர்  பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீரர் பென் மெக்லக்லாபுடன் இணைந்து களம் கண்ட ரோகன் போபண்ணா  ஆகியோர் ஏற்கனேவே தோற்று வெளியேறி விட்டனர்.


Tags : Sofia ,round ,Aussie Open , Aussie Open, Tennis, Indians, Exit
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து