×

கீழடியில் 7வது கட்ட அகழாய்வு பணியினை முதல்வர் நாளை துவக்கி வைக்கிறார்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: கீழடியில் 7வது கட்ட அகழாய்வு பணியினை முதல்வர் நாளை துவக்கி வைக்க இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரவித்தார்.
மாமல்லபுரம் கடற்கரையில், 20 அடிக்கு உயரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மணல் சிற்பத்தை மாமல்லபுரம் சிற்ப கல்லூரி மற்றும் கும்பகோணம் கவின் கல்லூரியை சேர்ந்த 16 மாணவர்கள், 20 நாட்களாக 160 அடி நீளம் கொண்ட முழு உருவ மணல் சிற்பத்தை வடிவமைத்தனர்.
 
இந்த மணல் சிற்பத்தை நேற்று தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கொடியசைத்து திறந்து வைத்தார்.  பின்னர், அவர் அளித்த பேட்டி: மாமல்லபுரத்தில் எடப்பாடியின் உருவத்தை 160 அடியில், வெற்றி நடை போடும் தமிழகம் என்று வாசகம் அடங்கிய சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் நாளை கீழடியில் 7வது கட்ட அகழாய்வு தொடங்கி வைக்க இருக்கிறார். இவ்வாறு அமைச்சர் கூறினர்.


Tags : Chief Minister ,Pandiyarajan ,phase , keeladi , excavation work, Minister Pandiyarajan, Interview
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...