தேமுதிக கொடி நாளை முன்னிட்டு மக்களுக்கு நல உதவி வழங்க வேண்டும்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை: விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000ம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12ம் நாள் அறிமுகப்படுத்தினேன். 2005ம் ஆண்டு செப்.14ம் தேதி தேமுதிக உதயமானபோது, நற்பணி மன்ற கொடி கட்சி கொடியாக மாற்றப்பட்டது. ஏதோ மூன்று வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல கட்சி கொடி.

அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கட்சியின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும். இந்த இனிய கொடி நாளில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் செய்து, தமிழகம் முழுவதும் பழைய கொடி கம்பங்களை புதுப்பிக்கவும், புதியதாக கொடி கம்பங்கள் உருவாக்கிடவும், இந்த இனிய கொடி நாளில் தொண்டர்களுக்கு கொடி நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories:

More