டாக்டர் திஷாவுக்கு நடந்தது போல் மற்றொரு பயங்கரம்: ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியை காட்டுக்குள் கடத்திச் சென்று பலாத்காரம்: தெலங்கானாவில் 4 கும்பல் வெறிச்செயல்

திருமலை: ஐதரபாத்தில் இன்ஜினியரிங் மாணவியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று, கல்லூரி முடிந்ததும் ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பினார். அப்போது, ஆட்டோ ஐதராபாத் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் பழுது ஏற்பட்டு விட்டதாக மாணவியிடம்  டிரைவர் கூறியுள்ளார்.

மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் மாணவியை ஏற்றி அனுப்பி வைத்தார். பின்னர், அந்த வேனை ஆட்டோவில் டிரைவர் பின்தொடர்ந்தார். அப்போது, வேனை ஓட்டிச் சென்றவர் கட்கேசர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்றார். பின்னர், வேனில் இருந்து மாணவியை அடித்து இறக்கிய ஆட்டோர் டிரைவர் உட்பட 4 பேரும் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், மாணவியின் ஆடைகள் முழுவதையும் பிடிங்கிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். அந்த வழியாக சென்ற இளம்பெண் ஒருவர், மாணவிக்கு ஆடைகள் வழங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், 2019ல் தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் திஷா பணிக்கு சென்று வீடு திரும்பும் போது பைக் பழுதாகி சாலையில் நின்றார். அப்போது, லாரி டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர் அவரை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர். இந்த 3 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். திஷாவிற்கு நடந்தது போன்ற சம்பவம், மீண்டும் மாணவிக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>