மாணவிக்கு மிரட்டல் வாலிபர் கைது

தாம்பரம்: அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (24), கார் ஓட்டுனர். இவருக்கும், அதே பகுதியில் உள்ள 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும் நட்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இதை பெற்றோர் கண்டித்ததால் நாகராஜிடம் பேசுவதை மாணவி நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த அவர், ஆசிட் ஊற்றி கொன்று விடுவேன் என மாணவியை மிரட்டியுள்ளார்.  புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>