மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை: பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை பீக் அவர்சில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக  5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். இதேபோல், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் பீக் அவர்ஸ் இல்லாமல் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

Related Stories:

>