×

கால்வாயில் விழுந்து தாய், மகள் பலியான விவகாரம்: புகார் மனுமீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நொளம்பூர் நெடுஞ்சாலை ஓரம் திறந்தநிலை மழைநீர் கால்வாயில் தாய், மகள் விழுந்து இறந்த விவகாரம் தொடர்பான புகார் மனு மீது முடிவெடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூர் அருகில் மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தனியார் கல்லூரி பேராசிரியர் கரோலின் பிரெசில்லா மற்றும் அவரது மகள் இவாலின் ஆகியோர் பலியாகினர். இந்த சம்பவத்தை அடுத்து, மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கவும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு புதிதாக புகார் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தியது. அந்த புகார் மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : canal canal , Mother, daughter fall into canal: High Court orders High Court to take immediate action on complaint
× RELATED கால்வாயில் விழுந்து தாய், மகள் பலியான...