×

இடஒதுக்கீடு வலியுறுத்தி சாதி சங்கங்கள் நடத்திய மாநாடு அமைச்சர்கள் கலந்து கொண்டது ஏன்? முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜ மேலிடம் கேள்வி

பெங்களூரு: கர்நாடகாவில் இடஒதுக்கீடு வலியுறுத்தி சாதி சங்கங்கள் நடத்திய மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியது யார் என்று முதல்வர் எடியூரப்பா மற்றும் மாநில பாஜ தலைவர் நளின் குமார் கட்டீலுக்கு பாஜ தலைமை கேள்வி கேட்டு பதில் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பின், பல சாதி அமைப்புகள் இட ஒதுக்கீடு பிரச்னை வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். மாநிலத்தில் வாழும் வால்மீகி வகுப்பினருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில வால்மீகி சங்கம் சார்பில் மடாதிபதி பிரசனானந்தபுரி சுவாமி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் அமைச்சர்கள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் பி.ஸ்ரீராமுலு, ரமேஷ்ஜார்கிஹோளி, ஆனந்த்சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநிலத்தில் வாழும் குருபர் வகுப்பினரை தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பினரின் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி காகிநெலே மடத்தின் மடாதிபதி நிரஞ்ஜனானந்தபுரி சாமி தலைமையில் 27 நாட்கள் நடந்த பாதயாத்திரை மற்றும் நிறைவு மாநாட்டில் அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, எம்டிபி நாகராஜ். பைரதி பசவராஜ். ஆர்.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சில பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். வீரசைவ பஞ்சமசாலி வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் 2ஏ பிரிவில் சேர்க்க வலியுறுத்தி பசவபீட மடாதிபதி பசவமிருத்யுஞ்ஜெயசுவாமி தலைமையில் நடந்த பாதயாத்திரை மற்றும் மாநாட்டில் அவ்வகுப்பை சேர்ந்த அமைச்சர்கள் ஆதரவு கொடுத்தனர்.

மாநிலத்தில் ஆளும் பாஜ விரைவாக பரிசீலனை செய்யவேண்டும். மாநிலத்தில் இதுவரை பிரதமர் கடன் உதவி திட்டத்தின் கீழ் 2.24 லட்சம் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தாலும் 66,423 பேருக்கு மட்டும் கடன் கிடைத்துள்ளது. 70 சதவீதம் விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பரிசீலனை செய்யப்படாத 70 சதவீதம் விண்ணப்பங்களை வங்கி அதிகாரிகள் விரைவாக பரிசீலனை நடத்தி கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். சில வங்கி அதிகாரிகளின் தவறான நடவடிக்கையின் காரணமாக பிரதமர் நரேந்திரமோடி நிதியுதவி கடன் திட்டத்தின் கீழ் பயனாளிகள் கடன் பெறமுடியவில்லை.

இப்போது மாநில அரசு கடன் வழங்கியதில் இந்திய அளவில் 5வது இடத்தில் உள்ளது. இனி வரும் காலங்களில் நமது மாநிலம் முதல் இடத்திற்கு வரவேண்டும்’’ இவ்வாறு முதல்வர் எடியூரப்பா அறிவுரை வழங்கினார். அப்போது சில அதிகாரிகள் பிரதமர் கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் இருப்பதால் கடன் வழங்க முடியவில்லை  என விளக்கம் அளிக்க முயன்றனர். அதிகாரிகளின் இந்த செயலின் காரணமாக முதல்வர் எடியூரப்பா கோபம் அடைந்தார்.

இதைதொடர்ந்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ``விண்ணப்பத்தில் அது சரியில்லை இது சரியில்லை என்று காரணம் கூறவேண்டாம். ஆதார் கார்டை அடிப்படையாக வைத்து கடன் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை விட்டு விட்டு கடன் வழங்காமல் இருப்பதற்கான வழிகளை நீங்கள்( அதிகாரிகள்) தேடுவதை கைவிடவேண்டும்’’, என்றார். இதைத்தொடர்ந்து சக்தி பவனில் முதல்வர் எடியூரப்பா பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். சுரங்கம் மற்றும் கனிமம், நீர்ப்பாசனம், சுகாதாரம், நகர வளர்ச்சி, பெங்களூரு வளர்ச்சி உள்ளிட்ட துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விபரங்களை அதிகாரிகளுடன் கேட்டறிந்த முதல்வர் எடியூரப்பா பட்ஜெட்டில் அந்த அம்சங்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அரசியல் லாபம்
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் டி.வி.சதானந்தகவுடா கூறும்போது, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ள வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை. அவரின் உரிமை போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு உள்ளது. ஆனால் சிலர் தங்கள் அரசியல் லாபத்திற்கு சாதி இட ஒதுக்கீட்டு பிரச்னையை கையில் எடுத்து பாதயாத்திரை, மாநாடுகள் நடத்துவது சரியல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம் என்ற விமர்சிக்க தோன்றுகிறது. இடஒதுக்கீடு விஷயத்தில் முதலில் குலசாஸ்த்திரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

Tags : conference ,ministers ,caste associations ,Eduyurappa ,BJP , Why did the ministers attend the conference held by the caste associations emphasizing reservation? BJP questions Chief Minister Eduyurappa
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை