×

ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப எடுத்து சென்ற ரூ.64 லட்சத்தை திருடிய வேன் டிரைவர் கைது: ரூ.36 லட்சம் மட்டுமே பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரு சுப்பிரமணியநகர் பகுதியில் கடந்த பிப்.2ம் தேதி ஏ.டி.எம்மிற்கு பணம் நிரப்ப சென்றிருந்தபோது, தனியார் ஏஜென்சியை சேர்ந்த வேன் டிரைவர், ரூ.64 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணத்துடன் தப்பியோடி விட்டார். உடன் சென்ற ஊழியர் ஏ.டி.எம்மில் பணம் நிரப்புவதற்காக சென்று திரும்பி வந்து பார்த்தபோது, பணம் வைத்திருந்த வேன் மாயமாகியிருந்தது. உடனே அவர்கள் சுப்பிரமணிய நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் டிரைவர் மண்டியா மாவட்டம் கே.ஆர் பேட்டை தொட்டயாச்சனஹள்ளி பகுதியை சேர்ந்த யோகேஷ். தனியார் ஏ.டி.எம்களுக்கு பணம் நிரப்பும் பொறுப்பை ஏற்றுள்ள ஏஜென்சியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் ஏ.டி.எம்மிற்கு வாகனத்தை இவர் தான் ஓட்டி செல்வார். பெங்களூரு தொட்டபிதரகல்லு பகுதியில் வசித்து வந்தார்.

பணத்தை திருடி கொண்டு, அத்தை மகளுடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. வடக்கு மண்டல போலீசார் இது குறித்து விசாரிக்க 4 தனிப்படை அமைத்திருந்தனர். அவர்கள் செல்போன் அலைக்கற்றையை வைத்து விசாரித்தனர். அதில் அவர் மைசூரு, எச்.டி கோட்டையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், யோகேஷை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது அத்தை மகளுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது. ஆனால் திருட்டிற்கும், அந்த பெண்ணிற்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானதையடுத்து, யோகேஷை  மட்டும் போலீசார் பெங்களூருவிற்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Van ,ATM , Van driver arrested for stealing Rs 64 lakh from ATM
× RELATED சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!!