நாளை முதல் வார நாட்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிப்பு

சென்னை: நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் பீக் ஹவர் என அழைக்கப்படும் உச்ச நேரங்களில் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனி வரை உச்ச நேரங்களில் இயக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பீக் ஹவர் தவிர்த்த மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ சேவை வழங்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் பீக் ஹவர் இன்றி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும்.

Related Stories:

>