×

எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3 மாதத்தில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு: தென்னக ரயில்வே பொது மேலாளர் பேட்டி

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் மூன்று மாதங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று காட்பாடி முதல் விழுப்புரம் ரயில் நிலையம் வரையிலான தண்டவாள சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகள், ஓய்வறைகளை திறந்து வைத்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம்-தஞ்சாவூர், நாகப்பட்டினம்- காரைக்கால்- திருவாரூர் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விழுப்புரம்- புதுச்சேரி இரு வழிப்பாதை தற்போதைக்கு சாத்தியமில்லை.

பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ரயில்கள் இயக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ரயில்வே துறை முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் ரயில்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக ரயில்கள் எண்ணிக்கை அதிகரித்து இயக்கப்படுகிறது. இதில் 72 சதவீதம் அதிவிரைவு ரயில்கள். அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மூன்று மாதங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : General Manager ,Southern Railway , train
× RELATED சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு