×

தலைக்கனம் தாங்க முடியலை சாமி!

இந்தியாவில் நாற்பத்தி நான்கு சதவீத குடிமக்கள் தங்களின் தகவல் சுமை அதிகரித்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தகவல் தொடர்பின் பொற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இப்படி தகவல்கள் பெருகிக்கொண்டே இருப்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்குத் தகவல் சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. கனடாவைச் சேர்ந்த ஓப்பன் டெக்ஸ்ட் என்ற தகவல் மேலாண்மை நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் புள்ளி விவரம் பெறப்பட்டுள்ளது. ‘மக்கள் புதிய சேவைகள் மற்றும் அதற்கான இயங்கிகள் உட்பட பல்வேறு புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முன்பு பெருகும் தகவல் குவியலால் சரியானதைத் தேர்ந்தெடுக்க இயலாமல் தடுமாறுகிறார்கள். அலுவலகச் சூழல்களில் அவர்களின் வேலைத்திறனைப் பாதித்து உற்பத்தியைக் குறைக்கவும் செய்கிறது’ என்கிறது இந்த ஆய்வு.

Tags : Sami , சாமி
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...