×

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் : பிரியங்கா காந்தி பேச்சு

லக்னோ:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று பிரியங்கா காந்தி பேசினார்.மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு உத்தரபிரதேசத்தில் ‘கிசான்   பஞ்சாயத்து’ என்ற பெயரில், விவசாயிகள் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் முதலாவது கூட்டம், சஹாரன்பூரில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ்   பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடியும், பாஜ தலைவர்களும் அவமதித்து வருகிறார்கள். இந்த 3 சட்டங்களும் சாத்தான் போன்றவை. அவர்கள் போராட்டம்   நடத்துவது ஏன் என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை. போராட்டம் நடத்தும் விவசாயிகளை தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு தான், தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது.   பாகிஸ்தான், சீனா செல்வதற்கெல்லாம் பிரதமருக்கு நேரமிருக்கிறது. போராடி வரும் விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து   செய்யப்படும்’ என்றார்.




Tags : Congress ,Priyanka Gandhi , பிரியங்கா காந்தி
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!