என் பேச்சை தப்பா புரிஞ்சிகிட்டாங்கப்பா : அமைச்சர் வேலுமணி விளக்கம்

கோவை : ‘‘அண்ணன்- தம்பி பிரச்னை குறித்த எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’’ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் வரும்   15ம் தேதி, அ.தி.மு.க. சார்பில் 123 ஜோடிகளுக்கு 73 சீர்வரிசை பொருட்களுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர்   எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 123 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் 73 சீர்வரிசை பொருட்களுடன் இலவசமாக   திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டத்தில் பேசும்போது அண்ணன், தம்பியாக இருந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்று நான் பேசியது   தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. தொகுதிக்கு 50 பேர் வேட்பாளர்களாக தகுதி இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவ்வாறு பேசினேன். இவ்வாறு வேலுமணி கூறினார்.

Related Stories:

>