×

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்புவது குற்றமாகிவிட்டது: அமித்ஷா குற்றச்சாட்டு.!!!

கூச்ச்பேஹர்: மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனது.

இதற்கு ஏற்ப, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். இவர்களில்  பெரும்பாலானோர் பாஜவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என 19 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இருப்பினும், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, பாஜகவை கடுமையாக தாக்கி வருகிறார். இதற்கு ஏற்ப, பாஜகவினரும் மம்தா பானர்ஜி ஆட்சியை குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கூச்ச்பேஹரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா., ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்புவது குற்றமாகிவிட்டது போன்ற ஒரு சூழல் வங்காளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மம்தா தீதி, ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கங்கள் இங்கே எழுப்பப்படாவிட்டால், அது பாகிஸ்தானில் எழுப்பப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் முடியும் வரை மம்தா தீதியும், ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவார் என்று நான் உறுதியளிக்கிறேன். நீங்களும் உங்கள் மருமகனும் இப்போது நிறுத்திவிட்ட நரேந்திர மோடியின் அனைத்து திட்டங்களும், நீங்கள் முதல்வராக இருக்க மாட்டீர்கள் என்பதால் மே மாதத்திற்குப் பிறகு நீங்கள் நிறுத்த முடியாது.  

மம்தா தீதி மோடி ஜியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார், சுபாஷ் பாபுவின் நிகழ்ச்சியின் போது கூட அவர் சண்டையிட்டார். இது சுபாஷ் பாபுவின் நிகழ்வு, நீங்கள் அங்கு அரசியலில் இருந்து விலகியிருக்கலாம் என்றார். டி.எம்.சி அரசாங்கத்தை பிடுங்கவும், 5 ஆண்டுகளில் சோனார் பங்களாவை உங்களுக்கு வழங்குவோம். ஊடுருவல்களின் வங்காளத்தை 5 ஆண்டுகளில் விடுவிப்போம் என்றார்.

130-க்கும் மேற்பட்ட பாஜக தொழிலாளர்கள் டி.எம்.சி குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், கொலைகாரர்கள் ஒவ்வொருவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.


Tags : Jai Shri Ram ,West Bengal ,Amit Shah accused. , Raising Jai Shri Ram slogans has become a crime in West Bengal: Amit Shah accused !!!
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு