×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் தி.மு.கவில் இணைந்தனர்

சென்னை: கிருஷ்ணகிரி - தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகரச் செயலாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன்  - கழக சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன், தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சலீம்பாஷா,

மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜே.விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம்.சுபலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினிநாகராஜ், காவேரிபட்டிணம் ஒன்றிய இணைச் செயலாளர் ஏகேஜி.மணிகண்டன், காவேரிபட்டினம் நகர இணைச் செயலாளர் கே.காமராஜ், காவேரிபட்டினம் நகர இணைச் செயலாளர் பாரதிராஜா, கிருஷ்ணகிரி ஒன்றிய இணைச் செயலாளர் மோரனள்ளி, கிருஷ்ணகிரி நகர வர்த்தக அணிச் செயலாளர் ரியாஸ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் பழனி, பர்கூர் ஒன்றிய  இணைச் செயலாளர் எச்.நிசார், ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.மார்க்கண்டேயன், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ரியாஸ்கான் - மத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.சீனிவாசன்,

வி.வடிவேலன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கண்ணதாசன்,  எஸ்.சௌந்தர், விவசாய அணிச் செயலாளர் எம்.டி.என்.சின்னதம்பி, இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.சரவணன், மகளிர் அணி இணைச் செயலாளர் ஆர்.மணிமாலா, துணைச் செயலாளர் வளர்மதி, செயற்குழு உறுப்பினர்கள் பேபி, தேவி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும், தருமபுரி மாவட்டம், மாவட்ட இணைச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில் அரூர் ஒன்றியச் செயலாளர் ரஜினிமாறன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்.பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ரஜினிகாந்த், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பி.பானுமதி பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் எம்.குமரபிரபு, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெருமாள்,

அரூர் ஒன்றிய இணைச் செயலாளர் ஏ.அல்லிமுத்து, அரூர் ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.கந்தவேல், குபேந்திரன், அரூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.கலையரசன், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஹரிராம்,பிரபு, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சாதிக்பாட்ஷா, எம்.சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சரவணன், ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் குபேந்திரன், ஒன்றிய விவசாய துணைச் செயலாளர் ராஜேந்திரன், நகர பொறுப்பாளர்கள் செட்டி (எ) செந்தில், குமார், நகர செயற்குழு ஜி.வெங்கட்ராமன், நகர இளைஞர் அணி செயலாளர் டி.அஜித்குமார், நகர பொறுப்பாளர் பி.தளபதி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் சாந்தி,

ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் வேடியம்மாள் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த  150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோது கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., தருமபுரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, எம்.எல்.ஏ.,  கழக சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன், ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : MK Stalin ,DMK ,Anna Arivalayam ,Chennai ,Rajini People's Forum , Rajini People's Forum joins DMK in the presence of DMK leader MK Stalin at Anna Arivalayam, Chennai
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...