ஹவுதி கிளர்ச்சிப்படையினரால் சவுதி விமான நிலையம் தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்

ஏமன்: சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான விமானம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர். சவுதியின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஏமன் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஆஸிம் மாநிலத்தில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் நேற்று திடீர் தாக்குதலுக்கு உள்ளது. ஆளில்லா ட்ரான் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

 தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் சவூதி அரேபிய விமானநிலைய தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இந்த போரில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை அதிபர் மன்சூருக்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் எல்லை நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபிய விமானநிலையம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>