புதுவையில் தினமும் விற்பனையாகும் மது விவரங்களை ஆன்லைனில் தெரிவிக்கும் நடைமுறை இன்று முதல் அமல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தினசரி விற்பனையாகும் மதுபானங்கள் விவரங்களை ஆன்லைனில் வெளியிடும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. புதுச்சேரி என்றாலே பலருக்கு நியாபகம் வருவது மதுபானம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் என பலரையும் கவரும் வகையில் பலவிதமான மதுபானங்கள் புதுவையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் நாள்தோறும் விற்பனை செய்யப்படும் மது விற்பனை விவரத்தை தினமும் ஆன்லைனில் வெளியிடும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரி கலால் துணை ஆணையர் சுதாகர் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால் அனைத்து சாராய ஆலைகள், மது விற்பனை கூடங்கள், குடோன்களில் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக இயங்குவதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடோன்களில் உள்ள அனைத்து கேமராக்களையும் நேரடி முறையில் பார்க்கும் வகையில் கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்துடன் இணைத்து அதுகுறித்து முழு விவரங்களை வரும் 20ம் தேதிக்குள் தெரிவித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து சாராய ஆலைகள் மதுபான உரிமம் பெற்றோர் தினசரி விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவித்திட வேண்டும் எனவும் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் காவல்துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரத்தேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>