×

விதிகளை மீறி வெளியிடப்பட்ட மருத்துவர் பணி ஆணையை இரவோடு இரவாக ரத்து செய்துள்ளது தமிழக அரசு

சென்னை: விதிகளை மீறி வெளியிடப்பட்ட மருத்துவர் பணி ஆணை இரவோடு இரவாக தமிழக அரசு ரத்து செய்துள்ளது. விதிகளை மீறி சுகாதாரத்துறை பணி நியமனம் தொடர்பாக இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் மருத்துவப்பணி ஆணை வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் பல்வேறு துறைகளில் விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்ட நிலைகளில் மருத்துவப்பணிகளிலும் இரவோடு இரவாக நியமானம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவசங்க தலைவர் டாக்ட்டர் ரவீந்திரநாத் கூறியது.

தொடர்ந்து தமிழக அரசு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், சமூகநீதிக்கு எதிராகவும் செயல் படுகிறது. அதேபோல் இடமாறுதல் உத்தரவு மற்றும் பணி நியமன உத்த்ராவு போன்ற போன்றவைகளில் நேர்காணல் நடத்தாமல் நேரடியாக பனி நியமனம் செய்யப்படுவதாக கூறினார். இந்த நடைமுறையானது மிக பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார். MRV தேர்வு நடத்தப்பட்டு தேர்வெழுதியவர்களுக்கு MRV தரவரிசை பட்டியலை கொடுத்தது. இந்த பட்டியலை வைத்துக்கொண்டு பொது சுகாதார இயக்குனரகம் இடஒதுக்கீடை பின்பற்றி மருத்துவ பணி இடங்களை வழங்கி இருக்கவேண்டும், அனால் அதுபோல் செய்யாமல் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 254 மருத்துவர்களை பணி நியமனம் செய்துள்ளனர்.

இதனால் சில பிரிவினருக்கு போதிய இடங்கள் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை கலந்தாய்வுக்கு அழைத்து விரும்பும் மாவட்டங்களில் பணிநியமனம் செய்யவேண்டும் என இந்த நடைமுறையும் தமிழக அரசால் மீறப்பட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு வேண்டிய சிலருக்கு அவர்கள் விரும்பும் பணி  இடங்களை தருவதற்காக இந்த மாதிரியான விதி மீறல்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இதே போல் கொரோனா காலத்திலும் இதுபோல் தனியார் மூலம் மருத்துவப்பணி நியமனம் செய்யப்பட்டதாக கூறிய அவர் அந்த பனி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறினார். தற்போது மினி கிளினிக் மருத்துவர் நியமனமும் தனியார் மூலம் நடத்த முயற்சி நடத்தப்பட்டது. அதனை நீதிமன்றத்தை அணுகி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் தமிழக அரசு இடஒதுக்கீடு முறைக்கு எதிராக செயல்படுவதாக தெரிகிறது. இது பெரும் கண்டனத்திற்குரியது என டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,government ,doctor , The Tamil Nadu government has canceled the doctor's work order issued in violation of the rules overnight
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...