கனடா தவிர்த்து, 25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி..! மத்திய வெளியுறவுத் துறை அனுமதி

டெல்லி: கனடா தவிர்த்து, 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய, மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த, ஜனவரியில், மத்திய அரசு, 1.05 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்துள்ளது. இதையடுத்து, இம்மாதம், 25 நாடுகளுக்கு, 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய, வெளியுறவு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. புனேவைச் சேர்ந்த, சீரம் மையத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட, 25 நாடுகளுக்கு, 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படும். ஏற்கனவே, 20 நாடுகளுக்கு, 1.68 கோடி டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில், வங்கதேசம், பூடான், ஆப்கன், இலங்கை உள்ளிட்ட, 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, 63 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தும் அடங்கும். சமீபத்தில், கனடா, 10 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வழங்குமாறு கோரியிருந்தது. ஆனால், தற்போது ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், கனடா இடம்பெறவில்லை. இதற்கு, மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வரவில்லை என்பது தான் காரணம் என, கூறப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார். கடந்த வாரம், கனடா பார்லி.,யில், எதிர்கட்சி எம்.பி., மைக்கேல் ரெம்பெல் கார்னர், இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி கோரப்பட்டதா என, கேள்வி கேட்டார். அதற்கு, தடுப்பூசி சப்ளை தொடர்பாக, பிரதமர், மோடியை தொடர்பு கொள்ளவில்லை என, பொதுச் சேவைகள் துறை அமைச்சரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அனிதா ஆனந்த் தெரிவித்தார். கனடா அரசு சார்பில், மத்திய அரசுடன் யார் தொடர்பு கொண்டார்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர் கூறினார். இந்த, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், அனிதா ஆனந்த் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

Related Stories:

>