×

தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10.78 கோடியாக அதிகரிப்பு: 23.62 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23.62 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,362,943 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 107,826,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 79,818,987 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 101,560 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 10.78 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 107,834,024 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,363,311 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 79,840,153 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 25,482,037 பேர் சிகிச்சையில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,896,738 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 483,077 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 17,827,247 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,871,060 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 155,399 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,571,629 என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,662,305 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 234,945 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,596,130 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : deaths , Corona virus continues to intimidate ..! Global death toll rises to 10.78 crore: 23.62 lakh deaths
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...