ரூ.90ஐ தாண்டியது பெட்ரோல் விலை..! 22 காசுகள் உயர்ந்து லிட்டர் 90.18 ரூபாய்க்கு விற்பனை: டீசல் விலை ரூ.83.18

சென்னை: சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 90.18 ரூபாய், டீசல் லிட்டருக்கு 83.18 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.96 ரூபாய், டீசல் லிட்டர் 82.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து லிட்டர் 90.18 ரூபாய்க்கும், டீசல் 28 காசுகள் அதிகரித்து லிட்டர் 83.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றே பெட்ரோல் விலை ரூ.90 ஐ தாண்டிய நிலையில் இன்று சென்னையில் முதன் முறையாக ரூ.90ஐ தாண்டியது.

Related Stories:

>