×

யானைகள் கொல்லப்படுவதை சிபிஐ விசாரிக்க உத்தரவு

மதுரை: தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படும் வழக்கை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த வக்கீல் மனோஜ் இமானுவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ தந்தம் உள்ளிட்டவைக்காக வேட்டையாடப்படுவதால் யானைகள் அழியும் நிலை ஏற்படுகிறது. எனவே, யானைகள்   ெகால்லப்படுவது குறித்து வன குற்ற தடுப்பு சிறப்பு பிரிவு அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் நேற்று விசாரித்தனர். வனத்துறை தரப்பில் ‘‘யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கொல்லப்படுவது, தந்தம், தோல், பல் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதில் நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் தொடர்பு உள்ளது. மாபியா கும்பலைப் போல செயல்படுகின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘ யானைகள் கொல்லப்படுவது, அவற்றின் உடல் பாகங்கள் வெட்டி கடத்தப்படுவது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Tags : killing ,CBI , Elephants, CBI, Order
× RELATED விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர்...