×

உடல் நலக்குறைவால் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் மரணம்

சேலம்: சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். சேலத்தை தலைமையிடமாக கொண்டு சிவராஜ் சித்தவைத்திய சாலை இயங்கி வருகிறது. ஏழு தலைமுறைகளாக இயங்கி வரும் இந்த மருத்துவமனை தமிழகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சிவராஜ் சிவகுமார் (78). இவர் கடந்த 60 வருடங்களாக சிவராஜ் சித்த வைத்திய சாலையை நடத்தி வந்தார்.

இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சிவராஜ் சஞ்சய் என்ற மகனும், சிவராஜ் கல்பனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிவராஜ் சிவகுமார் நேற்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் சேலம் சிவதாபுரத்தில் உள்ள அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலையில் இறுதி சடங்குகள் நடத்தி அடக்கம் செய்யப்பட்டது. சித்த வைத்தியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த சிவராஜ் சிவகுமார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Sivaraj Sivakumar ,Salem , Siddha doctor, Sivaraj Sivakumar, death
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!