பணியை இழந்த தூய்மை பணியாளர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் பேசியதாவது : சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள், புதிதாக எடுக்கப்படும் சாலைப் பணிகள், சிறப்பு சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்பந்தப்புள்ளி கோர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தனியாருக்கு ஒப்படைத்தப் பின் ஏற்கனவே உள்ள பணியாளர்கள் அனைவரையும் வேலையிழப்பு இல்லாமல் தனியார் அமைப்பில் ஈர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைப்போன்று நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், உள்ளிட்ட துறைகள் சார்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Related Stories:

>