நஞ்சை மற்றும் புஞ்சை நில உடைமை ஆவணங்களை முறைப்படுத்தப்பட்டுள்ளதா?: மக்களவையில் டி.ஆர் பாலு எம்.பி. கேள்வி

சென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மக்களவையில், நஞ்சை மற்றும் புஞ்சை நில உடைமை ஆவணங்கள் முறைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்: மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்:  இந்திய அரசு, 2008-2009 ஆண்டு முதலாகவே நில உடைமை ஆவணங்களை கணினி மயமாக்க, ஒருங்கிணைந்த நில அளவீட்டு மேலாண்மை முறையை கடைபிடித்து பிழைகளை நீக்கவும், நஞ்சை மற்றும் புஞ்சை உடைமை ஆவணங்கள் உடனடியாக மக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கும் வகையிலும், வருமானத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் உடனே கணக்குகளை பெறவும் அனைத்து மாநிலங்களும் உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றன.

நகர மற்றும் கிராம நில உடைமை ஆவணங்களை கணினி மூலம் கிடைக்கச் செய்ய, பல்வேறு மாநிலங்களின் வலைதளங்களின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், நில உடைமை ஆவணங்களை கணினி மயமாக்கவும், வருமானத் துறை அதிகாரிகளை பயிற்றுவிக்கவும், நவீன நில உடைமை தரவுகள் அறைகளை அமைக்கவும், தேவையான நிதி உதவியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்து வருகின்றன.

Related Stories:

>