×

இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 41.22 ஏக்கர் நிலம் அரசுடமை: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது. தற்போது, திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில், அவர்களுக்கு சொந்தமான 41.22 ஏக்கர் நிலம் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரில் சிறை தண்டனை நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினர்.

இந்நிலையில், இளவரசி, சிறையில் உள்ள சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை அரசு உடமையாக்கி, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கலெக்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்கி அறிவித்தனர். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த வேளகாபுரம் பகுதியில், சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள மெடோ அக்ரோ பார்ம்ஸ் நிறுவனத்தின், சுமார் 41.22 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து, தமிழக அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு செய்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் கணக்கில் வைத்தனர். இதன் மதிப்பு சுமார் 41 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா, ‘அரசுக்கு சொந்தமானது’ என நேற்று உத்தரவிட்டார்.

Tags : Tiruvallur Collector Notice ,land ,Princess ,Sudhakaran , ilavarasi , Sudhakaran, Property, Government
× RELATED ரம்ஜான் விடுமுறை, கொளுத்தும் வெயில்...