×

சசிகலாவால் அதிமுகவுக்கு பிரச்னை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ‘சசிகலாவால் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் வராது’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கல்பாக்கம் அடுத்த  புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் மீனவர் பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில், தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று புதுப்பட்டினம் மீனவர்குப்பம் பகுதியில் நடந்தது.

இதில், தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: ‘அதிமுக கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகளை விட அதிக கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளது. சசிகலாவால் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் வராது. சசிகலா கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கிறார் என்று பேசினார்.

Tags : AIADMK ,Minister Jayakumar ,Sasikala , Sasikala, AIADMK, Minister Jayakumar, Interview
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா