×

திண்டுக்கல்லில் ஏப்.2 முதல் தேஜஸ் ரயில் நின்று செல்லும்

சென்னை: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2ம் தேதி முதல் தேஜஸ் ரயில் நின்று செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேஜஸ் ரயில் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர பிற நாட்களில் காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதேபோல், மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 3 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே வழக்கமாக நின்று செல்லும்.

இந்நிலையில் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, மதுரை நாடாளுன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் முதல் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் நிறுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Tejas ,Dindigul , Dindigul, Tejas train
× RELATED ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து