×

யப்பா... என்னா எழுச்சி: பொன்னார் வைக்கும் ‘ஐஸ்’

முதலில் தொகுதி கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அப்படி கிடைத்தாலும் தனக்கு இடம் கிடைக்குமா என்ற பரிதவிப்பில் இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இதனால் அதிமுக மேலிடம் ‘ஜெர்க்’ ஆகிற வகையில் சசிகலாவை புகழ்ந்து தள்ளுவது போல் லேட்டஸ்டாக பேசி வருகிறார். ‘சசிகலாவுக்கு  திரண்ட எழுச்சி மிக்க கூட்டம் அவரது கட்சிக்கு மிகுந்த பலனை தரும். எம்.ஜி.ஆருக்கு திரண்ட கூட்டத்தை இதில் காண்கிறேன்’ என மெய்சிலிர்த்து பேட்டி கொடுத்திருக்கிறார்.


‘தெப்பக்குளம் நிரம்பியது தடுப்பணை கட்டினேன்’

எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன் கூறும்போது, ‘‘பதவியை துஷ்பிரயோகம் செய்யாமல் பணியாற்றியுள்ளேன். வைகை ஆற்றில் ₹20 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு அதில் இருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் முழு கொள்ளளவும் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 5,240 பேருக்கு முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வாங்கி கொடுத்துள்ளேன். ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கமும், 420 பேருக்கு டூவீலரும் வாங்கி கொடுத்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தொகுதியில் தார்சாலை, பேவர்பிளாக், போர்வெல் என கடந்த 5 ஆண்டுகளில் 137 பணிகள் நடந்துள்ளன. இதற்கு ₹10.26 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். ₹50 லட்சம் கொரோனா நிதியாக ஒதுக்கியுள்ளேன்’’ என்கிறார்.

‘தொகுதிக்குன்னு எதுவுமே செய்யல...’

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பாலசந்திரன் கூறும்போது, ‘‘அதிமுக வேட்பாளர் தேர்தலில் பணத்தை நம்பியே நின்றார். இன்றைக்கு மகால் பந்தடி, மஞ்சணக்காரத்தெரு, பச்சரிசிகாரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை, சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது. தொகுதியில் ரோடுகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தூசி பறக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொகுதியில் பல இடங்களில் சாலை தோண்டப்பட்டு, இன்னும் சீர் செய்யப்படவில்லை. சேதமடைந்து கிடக்கும் சாலையில்தான் மக்கள் சென்று வருகின்றனர். தொகுதி வளர்ச்சிக்கு என அவர் எதையும் செய்யவில்லை’’ என்கிறார்.

Tags : Assembly Election, Tamil Nadu
× RELATED சொல்லிட்டாங்க…