×

பணப்பட்டுவாடாவிற்கு என்ன தண்டனை தருவீங்க?: சரமாரியாக கேட்ட மாவட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற புதிய விதிப்படி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் பீகார் தேர்தல் நடந்தது. தமிழகத்திலும் இந்த அடிப்படையில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி மூன்றில் ஒரு பங்கு வாக்குச்சாவடிகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 1475 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 536 புதிய வாக்குச்சாவடிகளால் மொத்த எண்ணிக்கை 2011 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டி கலெக்டர் விஷ்ணு விவாதித்தார்.

அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ெநல்லை மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் பேசுகையில், ‘ஆளுங்கட்சி தேர்தலில் பணம் கொடுக்க திட்டம் தீட்டியிருக்கு. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டை வாங்கி விடுறாங்க’, என பணபட்டுவாடாவை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இதனால் கடுப்பான கலெக்டர் ‘இந்த கூட்டம் சப்ஜெக்ட் தொடர்பா பேசுங்க’ என்றார். அப்ேபாதும் விடாத சிவசுப்பிரமணியன், ‘பண பட்டுவாடா செய்தால் அவர்களை நாங்க பிடித்து தருகிறோம். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க எனச் சொல்லுங்க’ என மைக்கை பிடித்துக் கொண்டு விடாப்பிடியாக தனது கவலையை வெளிப்படுத்தினார்.

Tags : district , Don't get paid , sentence
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...