முதல்வர் காங்கயம் வருகையையொட்டி மொட்டை அடிக்கப்பட்ட ரவுண்டானா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் பஸ் நிலையம் முன்பாக உள்ள ரவுண்டானா பகுதியில் பேசுகிறார். முதல்வர் வருகையையொட்டி காங்கயம் பகுதியில் பல ஆண்டுகளாக சரிசெய்யப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் அவசர கதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர் பேச உள்ள ரவுண்டான பகுதியில் உள்ள மரங்கள், பூச்செடிகள் இரவோடு இரவாக வெட்டி அகற்றப்பட்டது. ரவுண்டானாவை சுற்றி வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளும் அகற்றப்பட்டது. இதனால் ரவுண்டானா பகுதி மொட்டை அடிக்கப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது. இதற்கு முன்பு ரவுண்டான தடுப்புச்சுவர்கள் சேதம் அடைந்தது பற்றி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

காளை சிலை வைக்கப்படுமா?

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது காங்கயம் ரவுண்டானா பகுதியில், காங்கயம் காளை சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அதற்கான பணிகள் ஏதுவும் நடைபெறவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு காங்கயம் வரும் நிலையில், காங்கயம் காளை சிலை வைக்க அடிக்கல் நாட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>