224 கோடி வங்கி கடன் மோசடி: டெல்லி, குஜராத்தில் ரெய்டு: இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள், இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: வங்கியில் 224 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளதோடு, இது தொடர்பாக டெல்லி என்சிஆர் மற்றும் குஜராத்தின் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.  அகமதாபாத்தில் இயங்கி வரும் அர்ச்சன்  எஞ்சின்கான் லிமிடெட் என்கிற மின் இணைப்பு கட்டுமான நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர்கள் கடந்த 2014-17 ஆம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  தலைமையிலான கூட்டமைப்பில் 182 கோடிக்கு மேல் கடன் பெற்றனர். குறிப்பாக, 2014-15 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில்,  குற்றம் சாட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் வங்கியில் இந்த தொகையை கடனாக பெறுவதற்காக போலி கணக்குகள், விலைப்பட்டியல்  மற்றும் பில்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டனர். இதனால்,  எஸ்பிஐக்கு  182.37 கோடி (தோராயமாக) இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அகமதாபாத், குருகிராம் உள்ளிட்ட இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 42 லட்சம் ரொக்கப்பணம், பத்திரங்கள், வங்க லாக்கர்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிவை  கைப்பற்றப்பட்டது. இதேபோன்று டெல்லியைச் சேர்ந்த கோயல் இன்ஜினியரிங்  பாலிமர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்  42 கோடிக்கு மேல்  மோசடி செய்ததாக சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது வழக்கு பதிவு செய்தனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளித்த புகாரில், இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் போலியான ஆவணங்களை காட்டி கடன் பெற்றுள்ளனர். அதேபோன்று கடனாக பெற்ற தொகையை இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுப்பி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர் என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதன்மூலம் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் 42.72 கோடி மோசடி செய்தாக புகாரில் வஙகி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் டெல்லி உள்ளிட்ட மூன்று இடங்களில் ரெண்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக சிபிஐ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>