×

மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளது கேம்சேஞ்சர் பட்ஜெட்: பாஜ எம்பி மனோஜ் திவாரி பாராட்டு

புதுடெல்லி: மோடி தலைமையிலான அரசு இந்த அண்டு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு ”கேம்சேஞ்சர்” என பாஜ எம்பி மனோஜ் திவாரி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டதணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் இதுபோன்று ஒரு பட்ஜெட்டை கூட தாக்கல் செய்யவில்லை என்றும் விமர்சித்தார். இதுபற்றி பாஜ எம்பி திவாரி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட் ஒரு கேம் சேஞ்சர் என துறைசார் முன்னணி பொருளாதார வல்லுநர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இதுபோன்ற பட்ஜெட்டை ஒருமுறை கூடதாக்கல் செய்ய முடியவில்லை.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நிர்மலா சீதாராமன் சிறப்பானதொரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளதாரம் சரிவை சந்தித்துள்ளபோதிலும், மோடி அரசு புதிய வரிகள் எதுவும் விதிக்கவில்லை. இது மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும் மேலான ஒன்றாக அமைந்துள்ளது. வரவுசெலவுத் திட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால்,  50 லட்சம் வருமானத்தை ஆறு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக ஆராய்வதற்கான கால அளவைக் குறைத்துள்ளதாகும். இது வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணம். இதுதவிர, உள்கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான ஒதுக்கீடும்  கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Modi ,Manoj Tiwari ,BJP , Modi-led government has tabled a game changer budget: BJP MP Manoj Tiwari praises it
× RELATED மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்;...