×

எலக்ட்ரிக் கார் சார்ஜிங் விவகாரம்: டெல்லி போக்குவரத்து துறை நோட்டீஸ்

புதுடெல்லி: எலக்டிரிக் கார் மாடல்களில் ஒன்று, சார்ஜிங் செய்வதில் நிறுவனம் தெரிவித்த குறிப்பிட்ட வரம்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்ற புகார் தொடர்பாக பதிலளிக்குமாறு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டெல்லியில் அதிகரித்து காற்றுமாசுவுக்கு வாகன புகைமாறுவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், காற்றுமாசுவை குறைக்கும் நடவடிக்கையாக ஆம் ஆத்மி அரசு புதிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இ-கொள்கையை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த வாகனங்களை வாங்குவோருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. 1,50000 வரையிலான கார்கள் வாங்கும் முதல் 1000 பேருக்கு 10,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களின் மாடல்கள், நிறுவனங்கள் பற்றிய பட்டியலையும் வௌியிட்டது. இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் எலக்ரிக் வாகனங்களும் இடம் பெற்றன.

இந்நிலையில், டெல்லி நஜாப்கர்க் பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பரில் டாடா மோட்டர்சின் (நெக்சான் இபி) மாடல்ங காரை வாங்கினார். அந்த வகை மாடல் ஒருமுறை சார்ஜிங் செய்தால் அதிகபட்சமாக 312 கிமீ தூரம் வரை செல்லும் என இந்நிறுவனம் தெரிவித்தது. இதனை நம்பி வாங்கிய வாடிக்கையாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது முழு பயன்பாட்டிலும் 200 கிமீ தூரம் தான் செல்ல முடிந்தது. இதையடுத்து, விற்பனை செய்த டீலரை அணுகி புகார் தெரிவித்தார். டீலரும் பல்வேறு யோசனைகளை தெரிவித்தார். அதனை பின்பற்றியபோதும் டாடா மோட்டார் உறுதியளித்த படி அதன் அதன் அதிகபட்ச வரம்பை எட்டவில்லை. இதனையடுத்து, இதுபற்றி சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

இதனையேற்று, இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கக்கோரி காரை தயாரித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டிடிசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், டாடா நிறுவனத்தின் முகவர் வரும் பிப்ரவரி 15ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு போக்குவரத்து துறை அலுவலக அதிகாரி முன் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில், அரசின் இ-வாகனங்கள் பட்டியலில் இருந்து பிரச்னையை சந்தித்த குறிப்பிட்ட வகை மாடல் கார் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, அரசின் நோட்டீஸ் கிடைக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Delhi Transport Department , Electric car charging case: Delhi Transport Department notice
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது