×

கர்நாடகாவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மஜத போட்டியிடாது: தேவகவுடா உறுதி

ரெய்ச்சூர்: தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அரசியல் கட்சிகள் பண பலத்தை நம்பி களத்தில் உள்ளனர். ஆகையால் தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் மஜத போட்டியிடாது போவதில்லை என்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,  காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகளின் ஆட்சி இருந்தாலும் கட்சி  தலைமையிடம் எந்த திட்டத்தையும் தைரியமாக கேட்டு பெற முடியாததுடன் இரு  கட்சிகளும் ஆட்சியின் போது, சுந்திரமாக எந்த திட்டமும் செயல்படுத்த  முடியாமல், அந்தந்த கட்சி தலைமையின் அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளதால்  வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நமது பக்கத்து மாநிலங்களில் மாநில கட்சிகள் பலமாக இருப்பதால்,  மத்தியில் எந்த கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் அதனுடன் இணைந்து  மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற்று கொள்கிறார்கள்.

கர்நாடகாவில் அதுபோன்ற  சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை பலமான மாநில  கட்சியாக உருவாக்க வேண்டியது அவசியமாகும். அதை கருத்தில் கொண்டு நான் மாநில  சுற்றுப்பயணம் தொடங்கியுள்ேளன். மஜதவை பலமான மாநில கட்சியாக மாற்ற எனது  சக்திக்கு மீறி உழைப்பேன் என்று ரெய்ச்சூர் மாவட்டத்தில் முன்னாள் பிரதமரும்  மஜத தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா கூறினார்.தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அரசியல் கட்சிகள் பண பலத்தை நம்பி களத்தில் உள்ளனர். ஆகையால் தற்போது நடைபெறவுள்ள மஸ்கி, சிந்தகி, பசவகல்யாண் மற்றும் பெலகாவி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மஜத போட்டியிட போவதில்லை என்றும் கூறினார்.

தேவகவுடாவுக்கு சிலை அமைத்த விவசாயி
ரெய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா நாராயணபுரா கிராமத்துக்கு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா கிருஷ்ணா நதியிலிருந்து நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கானதால கிராமத்தை சேர்ந்த விவசாயி, பிரபுரெட்டி என்பவர் தனது நிலத்தில் சொந்த பணத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் உருவ சிலையை உருவாக்கினார். அதே போல் இந்த சிலையின் கல்வெட்டில் பாரதரத்னா, கன்னடத கண்மணி, தேவதுர்கா தாலுகாவின் துரை என்று எழுதி வைத்துள்ளார். இந்த சிலையை நேற்று தேவதுர்கா தாலுகாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள தேவகவுடா திறந்து வைத்தார்.


Tags : Majatha ,by-elections ,Devagauda ,Karnataka , Majatha will not contest in by-elections in Karnataka: Deve Gowda
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...