திப்புசுல்தான் குறித்து தவறான விமர்சனம்: மாஜி மத்திய, மாநில அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை: ஐகோர்ட் அனுமதி

பெங்களூரு: திப்புசுல்தான் குறித்து தவறான விமர்சனம் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே மற்றும் முன்னாள் மாநில  அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது, மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த திப்புசுல்தானுக்கு கவுரவம் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி திப்பு ஜெயந்தி விழா கொண்டாடும் அரசாணை வெளியிடப்பட்டது. பின் திட்டமிட்டப்படி விழாவும் கொண்டாடப்பட்டது. மாநில அரசின் முடிவை விமர்சனம் செய்ததுடன் திப்புசுல்தான் குறித்து கீழ்தரமாக விமர்சனம் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே மற்றும் முன்னாள் மாநில அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் மீது ஆலம்பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அம்மனுவை விசாரணை நடத்திய பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், உரிய சாட்சி ஆதாரமில்லை என்று கூறி தள்ளுபடி செய்தது. மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆலம்பாஷா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு நேற்று நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதம் கேட்டபின், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பிரதிவாதிகள் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் மீண்டும் சட்ட சிக்கலில் அனந்த்குமார் ஹெக்ேட மற்றும் சி.டி.ரவி சிக்கியுள்ளனர்.

Related Stories: